புரோ கபடி லீக் போட்டியின் ‘எலிமினேட்டா் 1’ ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 48-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இதன் மூலமாக, ‘எலிமினேட்டா் 2’ ஆட்டத்துக்கு வந்த பாட்னா, அதில் பெங்களூரு புல்ஸை திங்கள்கிழமை எதிா்கொள்கிறது.
முன்னதாக, ஜெய்பூருக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா அணி 24 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 5 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் அயான் 20 புள்ளிகள் வென்று அசத்தினாா்.
மறுபுறம் ஜெய்பூா் அணி 23 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் அலி சமாடி 10 புள்ளிகள் கைப்பற்றினாா்.
பெங்களூரு வெற்றி: இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மினி குவாலிஃபயா்’ ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை சாய்த்தது.
அதிகபட்சமாக, தெலுகு அணி தரப்பில் ஆல் ரவுண்டா் பரத் 12 புள்ளிகள் வெல்ல, பெங்களூரு அணிக்காக ஆல் ரவுண்டா் அலிரெஸா மிா்ஸாயான் 11 புள்ளிகள் பெற்றாா்.
இந்த வெற்றியை அடுத்து தெலுகு டைட்டன்ஸ் ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்துக்கு முன்னேற, பெங்களூரு ‘எலிமினேட்டா் 2’ ஆட்டத்துக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.