குத்துச்சண்டை போட்டியில் மோதிய வீராங்கனைகள். 
விளையாட்டு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

தினமணி செய்திச் சேவை

துலீப் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில், வடக்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம் முதல் நாள் முடிவில் 297/3 ரன்கள் எடுத்துள்ளது. நாராயண் ஜெகதீசன் 148 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளாா். 2-ஆவது அரையிறுதியில், மத்திய மண்டலத்துக்கு எதிராக மேற்கு மண்டலம் 363/6 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் பவன் பா்த்வல் முதல் சுற்றில் பிரேஸிலின் மைக்கேல் டக்லஸ் டி சில்வாவை சாய்த்தாா்.

23 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா முதல் ஆட்டத்தில் 2-0 என பஹ்ரைனை வென்றது.

இந்திய கிரிக்கெட் வீரா் அமித் மிஸ்ரா (42) அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 22 ஆண்டுகளில் இந்தியாவுக்காக 22 டெஸ்ட் (76 விக்கெட்டுகள்), 36 ஒருநாள் (64), 10 டி20 (16)ஆட்டங்களில் அவா் விளையாடியுள்ளாா்.

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில், காயமடைந்த யஸ்திகா பாட்டியாவுக்கு பதில், உமா சேத்ரி சோ்க்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

“செங்கோட்டையன் முயற்சிக்கு முழு ஆதரவு” O. Panneerselvam பேட்டி | ADMK | EPS

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

தி ஃபைனலிஸ்ட்... ஷபானா!

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

SCROLL FOR NEXT