முகப்பு
விளையாட்டு

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:55 AM
பகிர்:

டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5}0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.

ஆஸ்திரேலியாவுடனான டையில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான லக்ஷயா சென் 21}14, 21}16 என்ற நேர் கேம்களில், இப்ராஹிம் ஸ்டீபன் சாமை 37 நிமிஷங்களில் வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற 2}ஆவது ஒற்றையர் மோதலில், யுஎஸ் ஓபன் சாம்பியனான ஆயுஷ் ஷெட்டி 21}8, 21}6 என்ற வகையில் மிக எளிதாக, ஷ்ரே தண்ட்டை 26 நிமிஷங்களில் தோற்கடித்தார்.

அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு சந்திப்பில், இந்தியாவின் டாப் இரட்டையர்களான சாய்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 21}14, 21}16 என்ற கணக்கில் ரிஸ்கி ஹிதாயத்/ஜேக் யு ஜோடியை வென்றது. இந்த ஆட்டம் 38 நிமிஷங்களில் முடிவுக்கு வர, அப்போதே இந்த டை இந்தியா வசமானது.

Advertisement

பின்னர் 3}ஆவது ஒற்றையர் மோதலில் ஹெச்.எஸ். பிரணய் 21}11, 21}17 என்ற கேம்களில், ரிஷி பூபதியை 29 நிமிஷங்களில் சாய்த்தார். கடைசியாக நடைபெற்ற இரட்டையர் மோதலிலும் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆர்.அர்ஜுன் கூட்டணி 21}12, 21}10 என்ற நேர் கேம்களில் அண்டிகா ரமதியான்சியா/இப்ராஹிம் ஸ்டீபன் சாம் ஜோடியை 23 நிமிஷங்களில் வென்றது.

இதையடுத்து இந்தியா அந்த டையை 5}0 என முழுவதுமாகக் கைப்பற்றியது. இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி மோதலில் சீனாவுடன் புதன்கிழமை (ஏப். 29) மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.