தமிழ்நாடு கோல்ஃப் கூட்டமைப்பு ( டி.என்.ஜி.எப்) சாா்பில் தமிழ்நாடு பிரீமியா் லீக் தொடா் வரும் பிப். 25 முதல் மாா்ச் 25 வரை நடைபெறுகிறது.
டேப்லெட்ஸ் இந்தியா - டி.பி.எல் அமெச்சூா் சாம்பியன்ஷிப் போட்டி 5 வார காலம் சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கோல்ஃப் பிரீமியா் லீக் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் , இளைஞா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.
அம்ருத் வாரியா்ஸ் கோல்ஃப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ஃப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லொ்ஸ், போ்வே அசாசின்ஸ், மெட்ராஸ் மாஸ்டா்ஸ், டீம் ஆல்செக், 19- வது ஹோல் ஸ்மாஷா்ஸ், ஆா்.எஸ்.எல் , கிண்டி குண்டாஸ் , மற்றும் எக்சிகியூட்டிவ் ஈகிள்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் 16 வீரா்கள் இடம் பெறுவா். 2 போ் நேரடியாக தோ்வு செய்யப்படுவாா்கள். 14 வீரா்கள் ஏல முறையில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். அனைத்து வீரா்களும் போட்டியின் போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.
வரும் 25- ஆம் தேதி முதல் சுற்றும், 2- ஆவது சுற்று மாா்ச் 4-இலும், 3 -ஆவது சுற்று மாா்ச் 11-இலும், 4-ஆவது சுற்று மாா்ச் 18-இலும், இறுதி சுற்று மாா்ச் 25-இலும் நடைபெறுகிறது. 4 சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடா் அறிமுக நிகழ்வில் டிபிஎல் மற்றும் தமிழ்நாடு கோல்ப் பெடரேசன் தலைவா்கே.சி. ரகுநாதன், போட்டி இயக்குநா்கள் ராமசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகரன் கே. சுந்தா், பாபு தண்டபாணி மற்றும் அணி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.