முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! புதிய சாதனை படைத்தார்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று...

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! புதிய சாதனை படைத்தார்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொண்டார். ஆரம்பம் முதல் அட்டகாசமாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-17 என வென்றார். 2-வது செட்டிலும் அவர் முன்னணியில் இருந்தார். எனினும் யமகுச்சி பிரமாதமாக விளையாடி 2-வது செட்டை 21-15 என வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் முதல் செட்டில் விளையாடியதுபோல கடைசி செட்டிலும் விளையாடிய சிந்து 21-10 என எளிதாக வென்றார். இதனால் அரையிறுதியை 21-17, 15-21, 21-10 என வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தார் சிந்து. 

இறுதிச்சுற்றில் உலகின் நெ.1 வீராங்கனையான தாய் ஜூ யிங்கை எதிர்கொள்கிறார் சிந்து. ஆசியப் போட்டியில் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சிந்து. இதனால் அவர் தங்கம் வெல்வாரா என்கிற ஆர்வம் இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →