முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

Updated On : 5 மார்ச் 2026, 1:34 pm IST
எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்
பகிர்:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்கள் உள்ள நிலையில் திமுக சார்பில் இருவரும் தேமுதிக, காங்கிரஸுக்கு தலா ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தேமுதிகவில் எதிர்பார்த்தபடியே கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தேமுதிக சார்பில் முதல்முறையாக ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்.

மாநிலங்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 4 இடங்களும் கிடைக்கும்.

இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர். இருவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேறு யாரும் போட்டியிடாததால் இந்த 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

DMDK LK sudhish files nomination for rajya sabha elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments