FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாநிலங்களவைத் தேர்தல்: உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு 12 பேர் மனு தாக்கல்

உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 10 இடங்களுக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது தொடர்பாக...

38 வினாடிகள் முன்பு
உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு 12 பேர் மனு தாக்கல் - Election Commission of India
பகிர்:

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 10 இடங்களுக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக, உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதில், உத்தரப் பிரதேசத்திற்கு 10 இடங்களுக்கும், உத்தரகாண்டிற்கு ஒரு இடங்களுக்கும், மேற்கு வங்கத்திற்கு ஒரு இடங்கள் என மொத்தம் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அக்.6 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 10 இடங்களுக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக, உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில், ஒன்பது மனுக்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான செவ்வாய்க்கிழமை(அக். 6) தாக்கல் செய்யப்பட்டுள்ளன; ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 10 இடங்களுக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அக்டோபர் 6 ஆம் தேதி மனு தாக்கல் செய்த ஒன்பது வேட்பாளர்களில், பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தர்மபால் சிங், ராதாகாந்த் ஓஜா, ராம் பிரகாஷ் பால், வித்யாசாகர் சோங்கர், கோபி கிருஷ்ணா பாண்டே, பிரியங்கா சிங் ராவத், ராம் பிரதாப் சிங் மற்றும் ஷ்ருதி கங்வார் ஆகிய எட்டு பேரும், சுயேச்சை வேட்பாளர் ஓம்கார் நாத் சௌராசியாவும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, செப். 30 ஆம் தேதி சமாஜவாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், தன்ராஜ் பரிமல் நட்வானி ஆகிய 2 பேரும், அக். 1 ஆம் தேதி சுயேச்சை வேட்பாளர் காண்டே சயன்னா வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை புதன்கிழமை(அக். 7) நடைபெறுகிறது; வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அக். 9 ஆகும்.

தேவைப்பட்டால் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு அக். 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே வெளிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 இடங்களுக்கு மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கட்சி எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜவாதி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 25 அன்று முடிவடைகிறது.

Twelve candidates have filed their nomination papers for the biennial elections to 10 Rajya Sabha seats from Uttar Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments