வெள்ளிப் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை : தமிழக அரசு
வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர்...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 400 மீ. தடை தாண்டுதலில் இந்தியாவின் தருண் அய்யாசாமி, 48.96 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த தருண் தேசிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்
வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர். வருங்காலத்தில் மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்துவதாகவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.