ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஸ்குவாஷ் இறுதிச்சுற்றில் தோல்வி: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி!

தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுகன்யா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி...

எழில்

ஆசியப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணியை ஹாங்காங் அணி வீழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுகன்யா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி, இறுதிச்சுற்றில் ஹாங்காங் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது. சுனன்யாவும் ஜோஸ்னாவும் தோல்வியைச் சந்தித்தார்கள். இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி  15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என 68 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!

SCROLL FOR NEXT