கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

இச்செய்தி உண்மையாக இருக்கக் கூடாது: ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு ‘சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிர்ச்சி!

ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

எழில்

அம்பட்டி ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகே அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடிந்தது. 2018 ஐபிஎல்-லில் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார் ராயுடு. ஒரு சதமும் மூன்று சதங்களுடன் 34 சிக்ஸர்கள் அடித்தார். இதையடுத்து இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் ராயுடு. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ராயுடு, கோலி, தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ராயுடு அறிவித்துள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ராயுடு வேண்டாம். இது உண்மையாக இருக்கக்கூடாது என்று ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT