கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பட்டி ராயுடு அறிவிப்பு!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக...

எழில்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அம்பட்டி ராயுடு.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடுவுக்கும் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

இதுவரை 55 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு, 1694 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். மேலும், ஆறு சர்வதேச டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT