முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

அரையிறுதிக்குத் தகுதி பெறுமா இங்கிலாந்து?: நியூஸிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங்!

உலகக் கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்ட இங்கிலாந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:25 AM
பகிர்:

உலகக் கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்ட இங்கிலாந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும் என்கிற இக்கட்டான நிலைமையில் அந்த அணி உள்ளது. இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வெல்லவேண்டும். 

செஸ்டர் லே ஸ்டீரிடில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணியில் ஃபெர்குசன், சோதிக்குப் பதிலாக செளதி, ஹென்றி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 3-ம் இடத்திலும் இங்கிலாந்து அணி அடுத்த இடத்தில் 10 புள்ளிகளுடனும் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.