கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

குஜராத்தில் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்குக் கூடுதல் பார்வையாளர்கள்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறித்து ஆர்ஜே பாலாஜி கிண்டல்!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலைத் திடீரென பலர் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், சஞ்சய் மஞ்ச்ரேக்கர்...

எழில்

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமரிசனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு பக்கச் சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமரிசனங்கள் அதிகமாக எழுந்தன. அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக ரசிகர்கள் அவருடைய வர்ணனை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். இதனால் அவரை வர்ணனையாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கும்படி பலரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை வைத்து தனது வர்ணனையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்துள்ளார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணையாளரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி. நேற்றைய ஆட்டத்தில் வர்ணனை செய்த ஆர்ஜே பாலாஜி, சஞ்சர் மஞ்ச்ரேக்கரின் நிலை குறித்துக் கிண்டலாகக் கூறியதாவது:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலைத் திடீரென பலர் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் எங்கள் வீட்டுக்கு மூட்டை மூட்டையாப் பணம் வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம், சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்த கோட் வாங்கினது, வாட்ச் கட்டியிருப்பது, பேண்ட், ஷூ எல்லாம் போட்டிருப்பதற்குக் காரணம், உங்களுடைய வர்ணனையால் தான். குஜராத்தில் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்குச் சந்தாதாரர்கள் அதிகமாக உள்ளார்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT