நியூஸிலாந்தை எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!
இதற்கு முன்பாக கடந்த 1992-ஆம் ஆண்டில் இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை முன்னேறியிருந்தது...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 3-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேயிருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த 1992-ஆம் ஆண்டில் இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை முன்னேறியிருந்தது.
இங்கிலாந்தின் செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.