கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

முதல் உலகக் கோப்பை யாருக்கு? இறுதியில் நியூஸி. முதல் பேட்டிங்

முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

Raghavendran

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14 ஜூலை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 

குறிப்பிடத்தக்க அம்சமாக இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்து ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது. 

இதனால் முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு எனப்படும் இங்கிலாந்து அதிகபட்சமாக 5 முறை உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி உள்ளது.

1979, 1987, 1992 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தையே பெற்றிருந்தது

அதே நேரத்தில் நியூஸிலாந்து அணியும் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற சிறப்புடன் திகழ்கிறது. மேலும் 6 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

இங்கிலாந்து:

ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் உட்.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்ரி, ட்ரென்ட் போல்ட், லாகி ஃபெர்கூஸன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT