கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

பந்துவீச்சிலும் சொதப்பிய இலங்கை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

DIN


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 136 ரன்களுக்கு சுருண்டது. 

இலங்கை பேட்டிங்: http://bit.ly/2Mn1Z33

137 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு கப்தில் மற்றும் முன்ரோ அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடி வந்த இந்த இணை, போகப்போக அதிரடிக்கு மாறியது. மலிங்கா, லக்மல், திசாரா பெரேரா என அனுபவ பந்துவீச்சாளர்களின் ஓவரையும் கப்தில் மற்றும் முன்ரோ விளாசினர். 

இதன்மூலம், கப்தில் 39 பந்துகளில் அரைசதம் எட்டினார். அவரைத்தொடர்ந்து, முன்ரோ 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

இந்த அதிரடி ஆட்டத்தால், நியூஸிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் 51 பந்துகளில் 73 ரன்களுடன், கோலின் முன்ரோ 47 பந்துகளில் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம், நியூஸிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT