கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நர்த்தனமாடிய நாதன் கௌடர் நைல்! சரிவை சரி செய்த ஸ்மித்

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதின. 

Raghavendran

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதின. 

ட்ரெண்ட்ப்ரிட்ஜில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக ஆல்-ரவுண்டர் நாதன் கௌடர் நைல் 8 பவுண்டரி, 4 இமலாய சிக்ஸர்கள் உட்பட 60 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்தார். 

மே.இ.தீவுகள் தரப்பில் கார்லஸ் பிரத்வொயிட் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒஷேனோ தாமஸ், ஷெல்டன் காட்ரல் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் ஹோல்டர் 1 விக்கெட் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT