உலகக் கோப்பை: மழை காரணமாக இலங்கை - வங்கதேசம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
இலங்கை - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக அதன் தொடக்கம் தாமதமாகியுள்ளது...
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019உலகக் கோப்பை: மழை காரணமாக இலங்கை - வங்கதேசம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
இலங்கை - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக அதன் தொடக்கம் தாமதமாகியுள்ளது...
இலங்கை - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக அதன் தொடக்கம் தாமதமாகியுள்ளது.
பிரிஸ்டாலில் நடைபெறும் இந்த ஆட்டம் மழை காரணமாக தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பிறகு குறைந்த ஓவர்களின் அடிப்படையில் இந்த ஆட்டம் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இலங்கை அணி 3 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வெற்றி கண்டு 3 புள்ளிகளுடனும் வங்கதேச அணி 3 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வெற்றி கண்டு 2 புள்ளிகளுடனும் உள்ளன. இலங்கை அணியின் ஓர் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
மே.இ.தீவுகள்-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான நேற்றைய உலகக் கோப்பை ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 அணிகளுக்கு தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.