கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

57 பந்துகளில் சதமடித்த மார்கன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டம்!

எழில்

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் வின்ஸ், மொயீன் அலி இடம்பெற்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள். ஸத்ரன், முஜீப் உர் ரஹ்மான், டவ்லத் ஆகியோர் அணிக்குள் நுழைந்துள்ளார்கள்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும் ஜேம்ஸ் வின்ஸும் களமிறங்கினார்கள். ஓரளவு விரைவாக இருவரும் ரன்கள் குவித்தார்கள். 9 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தார்கள். வின்ஸ், 26 ரன்களில் டவ்லத் ஸத்ரான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள் பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும். 26-வது ஓவரில் இந்தக் கூட்டணி 100 ரன்களை அடைந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ், நயிப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் இயன் மார்கன், வந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. தனக்கு முன்னால் வந்த ரூட்டின் ஸ்கோரை எளிதில் தாண்டிச் சென்றார் மார்கன். சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 80 ரன்கள் அடித்தபோது அவர் 8 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

ரஷித் கான் வீசிய 43-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து அசத்தினார் மார்கன். இதன்மூலம் 57 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார். உலகக் கோப்பை போட்டிகளில் நான்காவது அதிகவேக சதம் இது. சதத்தை எட்டியபோது அவர் 11 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மார்கன் 101 (57), ரூட் 70 (72) ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT