கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ஒரே ஆட்டம்: கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மார்கன், ரஷித்

DIN


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 398 ரன்கள் குவித்துள்ளது.

இதற்கு மிக முக்கியமான காரணம் இங்கிலாந்து கேப்டன் மார்கனின் அதிரடி தான் காரணம். இவர் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அசத்தினார். அதில், 17 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். 


ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப்-5 வீரர்கள் பட்டியல்:

  • இயான் மார்கன் - 17 சிக்ஸர்கள் (இன்று)
     
  • ரோஹித் சர்மா - 16 சிக்ஸர்கள் (2013)
     
  • ஏபி டி வில்லியர்ஸ் - 16 சிக்ஸர்கள் (2015)
     
  • கிறிஸ் கெயில் - 16 சிக்ஸர்கள் (2015)
     
  • ஷேன் வாட்சன் - 15 சிக்ஸர்கள் (2011)


உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த டாப்-5 வீரர்கள் பட்டியல்:

  • கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) - 50 பந்துகள் (2011)
     
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 51 பந்துகள் (2015)
     
  • ஏபி டி வில்லிர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 52 பந்துகள் (2015)
     
  • இயான் மார்கன் (இங்கிலாந்து) - 57 பந்துகள் (இன்று)
     
  • மேத்யூ ஹேடன் (ஆஸ்திரேலியா) - 66 பந்துகள் (2007)


உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் அதிகபட்ச ரன்கள்:

  • ஆப்கானிஸ்தான் - 397 (இன்று)
     
  • வங்கதேசம் - 386 (2019)
     
  • இந்தியா - 338 (2011)


ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 சிக்ஸர்கள்:

இந்த ஆட்டத்தில் மார்கன் 17 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 200 சிக்ஸர்களை கடக்கும் 8-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேசமயம், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டி வில்லியர்ஸ் மற்றும் மெக்கலத்தை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்தில் உள்ளார். 


உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்:

 

வீரர்ஓவர்கள்ரன்கள்/விக்கெட்டுகள்
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)9 ஓவர்கள் 110/0
மார்டின் ஸ்நைடன் (நியூஸிலாந்து)12 ஓவர்கள்105/2
ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்தியத் தீவுகள்) 10 ஓவர்கள் 104/1
தவ்லாத் ஸாத்ரான் (ஆப்கானிஸ்தான்)10 ஓவர்கள்101/2


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த சுழற்பந்துவீச்சாளர்:

  • ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 9 ஓவர்கள் 110/0 (இன்று)
     
  • முத்தையா முரளிதரன் (இலங்கை) - 10 ஓவர்கள் 99/0 (2006)
     
  • டுவைன் லெவராக் (பெர்முடா) - 10 ஓவர்கள் 99/1 (2007)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT