12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணியும், டூ பிளெஸ்ஸிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணியும் களம் காண்கின்றன.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களுக்கு விருந்து அளித்துள்ளார் இங்கிலாந்து ராணி எலிசபெத். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற கார்டன் பார்ட்டியில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டார்கள். ராணி எலிசபெத்துடன் இணைந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.