ஷிகர் தவான் படம்: எக்ஸ் / ஷிகர் தவான்
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்துள்ளார்.

DIN

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட்டர்களுல் ஒருவர் ஷிகர் தவான். இடதுகை பேட்டரான ஷிகர் தவான் 2010இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்காக களமிறங்கினார்.

கடைசியாக 2022இல் வங்கதேசத்துடனான போட்டியில் விளையாடினார்.

போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் 38 வயதாகும் ஷிகர் தவான் சர்வதேச கிர்க்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

34 டெஸ்ட்டில் 2315 ரன்களும் 167 ஒருநாள் போட்டிகளில் 6793 ரன்களும் 68 டி20களில் 1759 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 6768 ரன்கள் குவித்துள்ளார்.

269 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24 சதங்கள் அடித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் இருந்தார்.

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஒய்வை அறிவித்துள்ளார்.

அந்த விடியோவில் ஷிகர் தவான் பேசியதாவது:

வாழ்க்கையில் முன்னேற அடுத்த பக்கத்தை திருப்பவேண்டியது முக்கியமானது. அதனால்தான் நான் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து எனது ஒய்வை அறிவிக்கிறேன்.

இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடிய மன நிம்மதியுடன் வெளியேறுகிறேன். இனிமேல் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை என நினைத்து வருத்தப்படுவதைவிட ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடியுள்ளேன் என்ற மகிழ்ச்சி போதுமானதென எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT