கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா 
கிரிக்கெட்

தொடக்க வீரராக கே.எல்.ராகுல்..! உறுதிசெய்தார் ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவாரனெ இந்திய கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை (டிச.6) தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவாரனெ இந்திய கேப்டன் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் இரவு பகலாக பிங்க் நிறப் பந்தில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.

ரோஹித் இல்லாததால் முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். மிகவும் சிறப்பாக விளையாடினார். தற்போது, ரோஹித் அணியில் இணைந்துள்ளார்.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:

எங்களுக்கு முடிவு வேண்டும், வெற்றி வேண்டும். பெர்த் ஆடுகளத்தில் ராகுல், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார்கள். நான் வீட்டிலிருந்தே பார்த்தேன். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார்.

இந்த நேரத்தில் அவருக்குதான் தொடக்க வீரர் என்பது பொருத்தமானதாக இருக்கும். தற்போதைக்கு மாற்றம் தேவையில்லை. வருங்காலங்களில் வேண்டுமானால் மாறலாம்.

தனிப்பட்ட விதத்தில் நான் இடம்மாறி ஆடுவது எனக்கு எளிதானது அல்ல. ஆனால், அணிக்காக என்றுவரும்போது அது சரியான முடிவாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT