நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டனில் 115 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக். 43/4இல் இருந்த இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
ஹாரி புரூக் 23 போட்டிகளில் 2,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 10 அரைசதங்கள் அடங்கும். சராசரி 61.62ஆக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருது ஹாரி புரூக்கிற்கு கிடைத்தது.
இந்த நிலையில் ஹாரி புரூக் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் 10,000ரன்களை கடந்தவருமான ஜோ ரூட் கூறியதாவது:
ஹாரி புரூக்தான் சிறந்தவர்
என்னைக் கேட்டால் உலகத்திலேயே சிறந்த வீரர்களைவிட ஹாரி புரூக் எங்கேயோ இருக்கிறார். அழுத்தத்தை தாங்கிக்கொள்கிறார். உங்கள் தலைமீதும் சிக்ஸர் அடிப்பார், அவர் தலைக்கு மீதும் சிக்ஸர் அடிப்பார். சுழல்பந்துகளையும் அடிப்பார். வேகப்பந்துகளையும் அடிப்பார். அவருக்கு பந்துவீசுவது கடினம் என்றார்.
25 வயதாகும் ஹாரி புரூக் முல்தானில் முச்சதம் அடித்து அசத்தினார். ஐசிசி தரவரிசையில் ஹாரி புரூக் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஜோ ரூட் வெளிநாட்டில் 91.50 சராசரி வைத்துள்ளார். மொத்தமாக 151 போட்டிகளில் 12,886 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்கள், 64 அரைசதங்கள் அடங்கும். சராசரி 50.93 ஆக இருக்கிறது.
ஜோ ரூட் மிகச் சிறந்த வீரர்
ஜோ ரூட் குறித்து ஹாரி புரூக் பேசியதாவது:
நான் அவரை பிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால், அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். இந்த வாரம் ஒரு சதத்தினை அடித்தார். ஜோ ரூட் மிகச் சிறந்த வீரர்.
அவருடன் விளையாடுவது நல்ல அனுபவம். அவர் விளையாடுவதைப் பார்க்க சிறப்பாக இருக்கும். நான் 22 அல்லது 23 போட்டிகள்தான் விளையாடியுள்ளேன். அதனால் என்னுடைய இந்த சாராசரி விரைவிலேயே குறையலாம். நான் முடிந்த அளவுக்கு நன்றாக விளையாட முயற்சிக்கிறேன். வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி எடுக்கிறேன். பலவீனமாக ஷாட்களை பயிற்சி எடுக்கிறேன். எப்போதும் நாம் இன்னும் சிறப்பாக விளையாடலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.