முகமது ஆமிர்  படம்; எக்ஸ் / பாகிஸ்தான் கிரிக்கெட்
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த பாகிஸ்தானின் சர்ச்சையான வேகப் பந்துவீச்சாளர்!

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஆமிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

DIN

பாகிஸ்தான் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

32 வயதான பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 36 டெஸ்ட்டில் 119 விக்கெட்டுகளும் 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

சிறை சென்ற ஆமிர்

2010இல் 19வயதாக இருக்கும்போது வேண்டுமென்றே நோ -பால் வீசி ஸ்பாட்-பிக்சிங்கில் ஈடுபட்டதால் 2010-2015 காலகட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து தடைசெய்யப்பட்டார். அதற்காக சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2020இல் தேசிய தேர்வுக்குழுவின் அழுத்தத்தினால் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பின்னர், மனதை மாற்றிக்கொண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு வழி

இந்த நிலையில் முகமது ஆமிர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கடினமான முடிவினை சீரிய ஆலோசனைக்குப் பிறகு எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதானதல்ல. ஆனால், தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டினை புதிய உயரத்துக்கு முன்னேற்ற நான் இளைய தலைமுறைகளுக்கு வழிவிடுவதற்கு இதுதான் சரியான நேரம்.

எனது வாழ்க்கையில் பாகிஸ்தான் நாட்டினை பிரதிநிதிப்படுத்தி விளையாடியதை மிகவும் கௌரமாக கருதுகிறேன்.

தொடர்ச்சியான அன்பிற்கும் ஆதரவுக்கும் பிசிபி, எனது குடும்பம், நண்பர்கள், எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

2009இல் அறிமுகமான ஆமிர் 2017இல் சாம்பியன் டிராபியில் நாயகனாக விளங்கினார்.

மொத்தமாக 271 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆமிர் 1,179 ரன்கள் எடுத்துள்ளார்.

இமாத் வாசிம் ஓய்வை அறிவித்த அடுத்தநாளே ஆமிரும் ஓய்வை அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த இருவரும் அணியில் தேர்வாகவில்லை. ஆமிர் கடைசியாக அமெரிக்காவில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT