முகப்பு
கிரிக்கெட்

மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு!

மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 2:33 PM
- படம் | பிசிசிஐ
பகிர்:

மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ளது.

ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் பேட்டிங்கில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 15-வது இடத்துக்கும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 12-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இவர்கள் இருவரும் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் 769 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 729 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இந்திய வீராங்கனைகளில் அவர் ஒருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

Advertisement

பந்துவீச்சை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்கல்ஸ்டோன் 781 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 738 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 524 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி, ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments