கிரிக்கெட்

இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்சித் ராணா கௌதம் கம்பீர் குறித்து கூறியது என்ன?

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்சித் ராணா கௌதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்சித் ராணா அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 18) அறிவித்தது. டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகிறார். இரண்டு தொடர்களுக்குமே ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர். ஒருநாள் தொடரில் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்சித் ராணா இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து ஹர்சித் ராணா பேசியதாவது: கடினமாக உழைப்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நான் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் மனதளவில் காயமடைகிறேனோ, அப்போது என்னுடைய அறைக்கு சென்று அழத் தொடங்கிவிடுவேன். ஆனால், எனது அப்பா பிரதீப் ஒருபோதும் அவரது நம்பிக்கையை இழந்ததில்லை. என்னுடைய இந்த பயணத்தில் நான் மூன்று பேருக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது அப்பா, என்னுடைய பயிற்சியாளர் அமித் பண்டாரி மற்றும் மிக முக்கியமாக கௌதம் கம்பீர் அவர்களுக்கு நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன். எனது ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் கௌதம் கம்பீர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது ஆலோசனைகள் எனது மனநிலையை மாற்றியது. உன்மீது நம்பிக்கை இருக்கிறது. உன்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று கௌதம் கம்பீர் எப்போதும் கூறுவார் என்றார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT