விராட் கோலி - ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; அணியில் இடம்பிடித்த ரோஹித் சர்மா, விராட் கோலி!

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடருக்கான கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களுக்குமே ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புதுமுகங்களாக ரியான் பராக் மற்றும் ஹர்சித் ராணா இடம்பெற்றுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலுமே ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பிடிக்கவில்லை.

டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்‌ஷர் படேல், கலீல் அகமது மற்றும் ஹர்சித் ராணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT