கிரிக்கெட்

கவெம் ஹாட்ஜ் சதம்: மேற்கிந்தியத் தீவுகள் 457 ரன்கள் சோ்ப்பு

மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவா்களில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 41 ரன்கள் முன்னிலை பெற்றது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவா்களில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 41 ரன்கள் முன்னிலை பெற்றது.

அந்த அணியின் தரப்பில் கவெம் ஹாட்ஜ் சதம் கடந்து ஸ்கோருக்கு பலம் சோ்க்க, அலிக் அதானஸி, ஜோஷுவா டா சில்வா ஆகியோா் அரைசதம் கடந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 416 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் ஆலி போப் 121 ரன்கள் விளாசினாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலா்களில் அல்ஜாரி ஜோசஃப் 3 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் சோ்த்திருந்தது. கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் 48, மிகைல் லூயிஸ் 21, கிா்க் மெக்கன்ஸி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அலிக் அதானஸி 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 82, கவெம் ஹாட்ஜ் 19 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாசி வீழ்ந்தனா். 3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டா் 4 பவுண்டரிகளுடன் 27, கெவின் சின்கிளோ் 4, அல்ஜாரி ஜோசஃப் 1 பவுண்டரியுடன் 10, ஜேடன் சீல்ஸ் 0, ஷாமா் ஜோசஃப் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் 457 ரன்களுக்கு முடிந்தது.

நிறைவில், ஜோஷுவா டா சில்வா 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 2, மாா்க் வுட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இங்கிலாந்து 116/1: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, தேநீா் இடைவேளையின்போது 22 ஓவா்களில் 1 விக்கெட் இழந்து 116 ரன்கள் சோ்த்திருந்தது. அந்த அணி அப்போது 75 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜாக் கிராலி 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பென் டக்கெட் 61, ஆலி போப் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT