ஹர்மன்ப்ரீத் கௌர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

கிரிக்கெட்தான் கடவுள்..! மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நெகிழ்ச்சி!

இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமே என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது. துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நேர்காணலில் கூறியதாவது:

கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. கிரிக்கெட் இல்லையென்றால் நான் எதுவுமே இல்லை. கிரிக்கெட் எனக்கு அளித்த பெயர்போல வெறெதுவும் எனக்கு அளிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் எனக்கு கடவுள். நான் சிறிய வயதில் கண்ட கனவு, விளையாடும்போது நினைப்பது எல்லாமே எனக்கு கிரிக்கெட் கொடுத்ததுதான்.

முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தபோது அதை பெற்றோர்களுக்கு அனுப்புவதா அல்லது கிரிக்கெட் கற்றுக்கொடுத்த பயிற்சியாளருக்கு அனுப்புவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இருவர்களுமே எனக்கு சமமானவர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT