இலங்கை கேப்டன் சரித் அசலங்கா படம் |ஐசிசி
கிரிக்கெட்

நியூசி. ஒருநாள், டி20 தொடர்: இலங்கைக்கு புதிய கேப்டன்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக அசலங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக அசலங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சமீபத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்த பல வீரர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டி20 போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் நவம்பர் 13, 17 மற்றும் 19 ஆம் தேதிகளிலும் நடைபெற இருக்கின்றன.

முதல் மூன்று போட்டிகளுக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இரு அணிகளும் செப்டம்பரில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. அந்தத் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடருக்கான அணி

சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, பெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, விக்ரமசிங்கே, அசித்தா பெர்னாண்டோ, திசன் மதுசன்கா, முகமது சிராஸ்.

டி20 தொடருக்கான அணி

சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுக ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா, துனித் வெல்லலகே, ஜெப்ரி வாண்டர்சே, விக்ரமசிங்கே, நுவான் துஷாரா, அசித்தா பெர்னாண்டோ, பினுரா பெர்னாண்டோ, பதிரானா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT