ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்  படங்கள்: இன்ஸ்டா / நவீன் உல் ஹக்
கிரிக்கெட்

லக்னௌ அணி தன்னை தக்கவைக்காதது குறித்து மனமுடைந்த ஆப்கன் வீரர்!

லக்னௌ அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் கூறியதாவது...

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி 2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் ஆப்கன் வேகப்பந்து வீச்சாளரை தக்கவைக்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுலையும் விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தக்கவைத்ததாக எல்எஸ்ஜி அணி அறிவித்தது.

2024ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் நவீன் உல் -ஹக் 14 விக்கெட்டுகளும் எகானமி 10.19ஆகவும் பந்து வீசியிருந்தார்.

விராட் கோலியுடன் சண்டையிட்டு மிகவும் பிரபலமானார். பின்னர் கடந்தாண்டு இருவரும் நண்பர்களாகியதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் வரும் நவ.24, 25ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆப்கன் வீரர் நவீன் உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக இந்த அற்புதமான அணியில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அணியின் வருங்காலத்துக்கும்m அணியின் வெற்றிக்கு பாடுபடும் நிர்வாகக் குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துகள். எல்எஸ்ஜி அணியை எப்போதும் மறக்கமுடியாது. அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT