பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடைபெறும்?
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் இரண்டு நாடுகள் தேர்வில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இத்தொடரின் போட்டிகளை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளன.
தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு 16 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில்லை.
Advertisement
Advertisement
ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தோமோ அதுபோல இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டுமென பாக். விரும்புகிறது.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் ஷமி..! ஆஸி. தொடரில் இணைவாரா?
ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் இந்தமுறையும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் தென்னாப்பிரிக்கா அல்லது யுஏஇ நாட்டில் நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக ஆசிய கோப்பையை பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் (பாக்., இலங்கையில்) நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.