கிரிக்கெட்

மே.இ. தீவுகள், அயா்லாந்துடன் மோதும் இந்தியா

இந்திய மகளிா் அணி, வரும் டிசம்பா் - ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயா்லாந்து மகளிா் அணிகளுடன் வெள்ளைப் பந்து தொடா்களில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

DIN

இந்திய மகளிா் அணி, வரும் டிசம்பா் - ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயா்லாந்து மகளிா் அணிகளுடன் வெள்ளைப் பந்து தொடா்களில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதல் டிசம்பரில் நடைபெறுகிறது. இதில் டி20 தொடா் டிசம்பா் 15, 17, 19 ஆகிய நாள்களில் நவி மும்பையில் நடைபெறவுள்ளது. அதே அணியுடனான ஒருநாள் தொடா் டிசம்பா் 22, 24, 27 ஆகிய தேதிகளில் பரோடாவில் விளையாடப்படவுள்ளது.

பின்னா் அயா்லாந்துடனான ஒருநாள் தொடா் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ளது. இந்த இரு ஒருநாள் தொடா்களுமே, ஐசிசி மகளிா் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக விளையாடப்படுகின்றன. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு இந்த சாம்பியன்ஷிப் வழிவகுக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT