தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம்.. Themba Hadebe
கிரிக்கெட்

முயற்சிக்கு பெருமையாக இருக்கிறது..! தோல்வி குறித்து தெ.ஆ. கேப்டன் பேட்டி!

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20யின் தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கூறியதாவது...

DIN

புதன்கிழமை நடைபெற்ற 3ஆவது டி20யில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா 208 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் திலக் வர்மா சதம் அடித்து அசத்தினார். தெ.ஆ. சார்பில் மார்கோ யான்சென் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து போராடினார்.

இந்தப் போட்டி குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:

இலக்குக்கு அருகாமையில் சென்றதன் முயற்சிக்கு பெருமையாக இருக்கிறது. கடைநிலை பேட்டர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வருவதைப் பார்க்க நன்றாக இருந்தது.

இந்தமாதிரி ஆடுகளத்தில்தான் 220 ரன்களையும் சேஸிங் செய்யலாம். இதில் ஓவ்வொரு ஓவரும் முக்கியமானது. அடுத்த போட்டியில் சில பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மார்க்ரம் மீது கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி டி20 நவ.15ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT