விராட் கோலி படம் | AP
கிரிக்கெட்

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி கூறியதென்ன?

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.

DIN

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. இந்த இரண்டு தொடர்களிலுமே சேர்த்து அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், அவரது ஃபார்ம் மீதான விமர்சனங்கள் எழுந்தன.

கிங் கோலி இஸ் பேக்

பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான். விராட் கோலி அவரது கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார். அதனால், அவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என எதிரணிதான் யோசிக்க வேண்டியிருக்கும்.

மீண்டும் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி அமைதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளையாடும் முதல் மூன்று இன்னிங்ஸ்கள் மிகவும் முக்கியமாக இருக்கும். அவர் அவசரப்படாமல் அமைதியாக அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நன்றாக விளையாடுவார் என்றார்.

கடந்த 2011-2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி சதமடித்து அசத்தினார். அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, விராட் கோலி 4 போட்டிகளில் 692 ரன்கள் குவித்தார்.அவரது சராசரி 86.50 ஆக இருந்தது.

2018-2019 ஆம் ஆண்டு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக அமைந்தார். அந்த தொடரின்போது, பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 123 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT