கம்மின்ஸ், பும்ரா.  படம்: எக்ஸ் / ஐசிசி
கிரிக்கெட்

ஐபிஎல் ஏலம் பெர்த் டெஸ்ட்டை பாதிக்காது..! கம்மின்ஸ் பேட்டி!

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கான டெஸ்ட்டை ஐபிஎல் ஏலம் பாதிக்காது என பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

DIN

டேனியல் வெட்டோரி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க செல்வார்.

நவ.24,25 ஆம் தேதிகளில் ஏலம் நடைபெறுகிறது. பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் நவ.22 முதல் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்டில் டேனியல் வெட்டோரி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மின்ஸ், ஹெட் மட்டுமே தற்போதுள்ள ஆஸி. அணியில் ஐபிஎல் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மற்ற ஆஸி. வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை.

ரிக்கி பாண்டிங் (பஞ்சாப்), ஜஸ்டின் லாங்கர் (லக்னௌ) தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் அவர்களும் ஏலத்தில் பங்கேற்பார்கள்.

ரிக்கி பாண்டிங், “இரு அணியிலும் ஏலத்தில் பலர் பங்கேற்கிறார்கள். டெஸ்ட்டுக்கும் ஏலத்துக்கும் 9 நாள்கள் முன்பு நடத்தியிருக்கலாம். இது தேவையில்லாத அழுத்ததை தரும்” எனக் கூறியிருந்தார்.

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

டேனியல் வெட்டோரி ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வார். இது எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. டேனியல் அங்கு சென்றாலும் இங்கு தற்போது முழு தயாரிப்புகளில் உடன் இருக்கிறார். கூட்டங்கள், உரையாடல்கள் என அனைத்தும் முடித்துவிட்டார்.

வீரர்கள் குறித்து தெரியவில்லை. அதிகமான வீரர்கள் பலரும் ஏற்கனவே அங்கு இருந்துள்ளார்கள். அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. யார் யாரை தேர்வு செய்வார்கள் செய்யமாட்டார்கள் என்பது அவர்களிடம் இல்லை. வெறுமனே உட்கார்ந்து பார்த்துகொண்டிருக்க வேண்டும். முதல் இரண்டு நாள்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்குமென தற்போதுவரை தெரியவில்லை.

நாங்கள் முழு கவனத்துடன் பெர்த் டெஸ்ட்டில் விளையாடுவோம். ஏலத்தின் நேரம் முதல் இரண்டு நாள்களில் எந்த இடையூரையும் ஏற்படுத்தாது. எங்களின் சிறந்த முயற்சியை அளிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT