ஜுலான் கோஸ்வாமி 
கிரிக்கெட்

ஈடர்ன் கார்டன் புதிய அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமி பெயர்!

முன்னாள் இந்திய மகளிர் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமியின் பெயரை ஈடன் கார்டன் அரங்குக்கு சூட்டவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின்போது இந்த அரங்கம் திறக்கப்படவிருக்கிறது.

20 ஆண்டுகாலமாக மகளிர் கிரிக்கெட்டில் அசத்திய ஜுலான் கோஸ்வாமி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (255) எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகும் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

12 டெஸ்ட், 204 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

41 வயதாகும் ஜுலான் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இருக்கிறார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்கிலும் ஆலோசகராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது தலைமையில் டிகேஆர் அணி இறுதிப்போட்டிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி , பன்கஜ் ராஜ், ஜகமோகன் டால்மியா, பிஸ்வந்த் தத் ஆகியோரது பெயர்கள் ஏற்கனவே ஈடர்ன் கார்டனில் பல அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT