புஜாரா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியுள்ளார்.

DIN

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

புஜாரா கூறுவதென்ன?

பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. 3-வது இடத்தில் மிகுந்த அனுபவமுள்ள கே.எல்.ராகுல் அந்த இடத்தில் களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். இடதுகை வலதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்திய அணி தேவ்தத் படிக்கல்லை 3-வது வீரராக களமிறக்கும் எனத் தெரிகிறது.

அவர் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்குபவர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதைக் காட்டிலும், 3-வது வீரராக களமிறங்குவது அவருக்கு எளிதாக இருக்கும். அவரால் 3-வது இடத்தில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், அது அணிக்கு நன்றாக அமையும் என்றார்.

இந்தியாவின் டேவிட் வார்னர்

இந்தியா உருவாக்கிய மிகவும் திறமையான வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒருவர் என புஜாரா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜெய்ஸ்வால் நிறைய விஷயங்களை நிரூபிக்க உள்ளார் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஜெய்ஸ்வால் அவரது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் எப்படி விளையாடினாரோ, அதேபோல இந்திய அணிக்காக ஜெய்ஸ்வாலால் விளையாட முடியும்.

தொடக்க ஆட்டக்காரராக அவர் அணிக்கு மிக முக்கிய வீரராக உள்ளார். அவர் மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT