ஸ்டீவ் ஸ்மித், பும்ரா.  
கிரிக்கெட்

பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல்முறையாக கோல்டன் டக் அவுட் ஆனார்.

DIN

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.

கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அடுத்து விளையாடிவரும் அஸி. அணி 15 ஓவர் முடிவில் 37/4 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இதில் இந்தியாவின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ஆஸி.யின் தலைசிறந்த பேட்டர் ஸ்டீவ் ஸ்மீத் முதல்முறையாக சொந்த மண்ணில் கோல்டன் டக் அவுட் ஆகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

110 போட்டிகளில் 9,685 ரன்கள் எடுத்துள்ளார். சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலி கேட்ச் விட்டதால் லபுஷேன் இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

SCROLL FOR NEXT