ரிஷப் பந்த் கோப்புப் படம்
கிரிக்கெட்

சோகமாக இருக்கிறது, மீண்டும் ஒன்றிணைவோம்; ரிஷப் பந்த் குறித்து தில்லி கேபிடல்ஸ் உரிமையாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது என அந்த அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் ஏலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்ச தொகைக்கு இந்திய வீரர் ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

மீண்டும் ஒன்றிணைவோம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. இருப்பினும், ரைட் டூ மேட்ச் தெரிவைப் பயன்படுத்தியபோது, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடி என்ற மிகப் பெரிய தொகையைக் கூறியதால், தில்லி கேபிடல்ஸ் பின்வாங்கியது.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது எனவும், விரைவில் நாம் மீண்டும் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பார்த் ஜிண்டால் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரிஷப் பந்த் நீங்கள் எப்போதும் எனது இளைய சகோதரராக இருப்பீர்கள் என்பதை என்னுடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கிறேன். நீங்கள் தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து பிரிவதைப் பார்க்க மிகவும் சோகமாக இருக்கிறது.

நீங்கள் எப்போதும் தில்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கிறீர்கள். நாம் விரைவில் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அணிக்காக உங்களது அனைத்து பங்களிப்புக்கும் மனமார்ந்த நன்றி. நாங்கள் உங்களை எப்போதும் விரும்புகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றாக செயல்படுங்கள். உலகம் உங்கள் காலடியில். உங்களுக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT