மிட்செல் மார்ஷ், வெப்ஸ்டர்.  படங்கள்: ஏபி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
கிரிக்கெட்

மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இவர்..! முன்னாள் வீரரின் திடமான கருத்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக புதிய வீரரை சேர்க்க வேண்டுமென முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுன்டர் மிட்செல் மார்ஷுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நூறு சதவிகிதம் விளையாடமுடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ஷ் பந்துவீசினார். ஆஸி. அணிக்கு அதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

2 வருடமாக சராசரி 50 உடன் ஷெஃபீல்டு ஷீல்டில் 303 ரன்கள், 9 விக்கெட்டுகள் அசத்தியுள்ளார் வெப்ஸ்டர்.

அடுத்த டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச.6ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக டாஸ்மானியன் பகுதியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டரை தேர்வு செய்யலாம் என முன்னாள் விக்கெட் கீப்பர் ஐயன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐயன் ஹீலி பேசியதாவது:

மார்ஷுக்கு பதிலாக வெப்ஸ்டரை அணியில் எடுக்க வேண்டும். மாற்றுவீரராக அல்லாமல் அனைத்து போட்டியிலும் விளையாடும்படி தேர்வு செய்ய வேண்டும். 12ஆவது வீரராக தேர்வு செய்வதைவிட பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். இல்லையெனில் தேர்வாகாமல் இருப்பது நல்லது.

போலண்டுக்கு பதிலாக வெப்ஸ்டரை தேர்வு செய்யலாம். 2 மீட்டர் உயரம் கொண்டவர். இளைஞர்கள், 2ஆவது லெவன், ஆஸி. ஏ, ஷீல்டு லெவலில் சிறப்பாக விளையாடியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். குறிப்பாக அழுத்தமான நேரங்களில் சரியாக விளையாடியுள்ளார்.

மார்ஷ் குணமடைந்தால் டாப் ஆர்டரில் விளையாடலாம். அடுத்து ஆல்ரவுண்டராக வெப்ஸ்டர் விளையாடலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஜம்மு - காஷ்மீரில் முக்கிய அணைகளின் அனைத்து மதகுகளும் திறப்பு!

ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: பரிசுத் தொகை 4 மடங்கு அதிகம்!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT