ஜோ ரூட் Anjum Naveed
கிரிக்கெட்

இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்..! 35ஆவது சதமடித்த ஜோ ரூட்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.

DIN

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது.

64 ஓவரில் இங்கிலாந்து அணி 323/3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹாரி புரூக் 53 ரன்களுடனும் ஜோ ரூட் 102 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

அலைஸ்டர் குக் சாதனை முறியடிப்பு

அலைஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் 12,472 ரன்கள் எடுத்து ஓய்வு பெற்றார். ஜோ ரூட் இந்தப் போட்டியில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குக்கின் சாதனையை (12,473) முறியடித்தார்.

அத்துடன் தனது 35ஆவது சதத்தையும் ஜோ ரூட் நிறைவு செய்துள்ளார்.

இந்தாண்டில் அதிக சதங்கள் (5) அடித்தவர்கள் பட்டியலில் கமிந்து மெண்டிஸுடன் சமன்செய்துள்ளார் ஜோ ரூட்.

டெஸ்ட்டில் அதிக சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - 51

ஜாக் காலிஸ் - 45

ரிக்கி பாண்டிங் - 41

குமார் சங்ககாரா - 38

ராகுல் திராவிட் - 36

ஜோ ரூட் - 35

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT