மஹ்மதுல்லா படம்: எக்ஸ் / வங்கதேச கிரிக்கெட்
கிரிக்கெட்

அதிரடியாகதான் விளையாடுவோம்..! மஹ்மதுல்லா பேட்டி!

வங்கதேச அணியின் மூத்த வீரரான மஹ்மதுல்லா இனியும் அதிரடியான பேட்டிங்கை தொடருவோமெனக் கூறியுள்ளார்.

DIN

வங்கதேச அணியின் மூத்த வீரரான ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்குப் பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மஹ்மதுல்லா 2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரை 139 போட்டிகளில் விளையாடி 117.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2,400 ரன்கள் எடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான மஹ்மதுல்லா 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட்டினை 0-2 என இழந்த வங்கதேசம் டி20யில் 0-1 என பின்னிலையில் இருக்கிறது. இன்று 2ஆவது டி20 அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த வங்கதேச அணியின் மஹ்மதுல்லா பேசியதாவது:

கடந்த சில வருடமாக எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். முதல் போட்டியில் மோசமாக விளையாடியதாக நினைக்கவில்லை.

ஒரு போட்டியினால் எங்களது ஆட்டத்தின் திறனை நாங்கள் சந்தேகப்படவில்லை. அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்.

நாங்கள் அதிரடியாக பேட்டிங் விளையாட போகிறோம். நாங்கள் திட்டமிட்டபடி ஒழுங்காக விளையாடினால் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT