சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!
இந்திய வீரர் ரிஷப் பந்த் இதுவரை 7 முறை 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள்.
சதம் அடிக்கும் முன்பு பதற்றத்தால் ஆட்டமிழப்பதால் இந்தப் பெயர். சச்சின் இந்த பிரச்னைக்கு மிகவும் பெயர்போனவர்.
இதுவரை 90-100 ரன்களுக்குள் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்ட்டில் மட்டும் 10 முறை ஆட்டமிழந்துள்ளார்.
Advertisement
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக சச்சின் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அதில் 51 சதங்கள், 68 அரைசதங்கள் அடங்கும்.
ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகமுறை 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழந்தவர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் - 10 முறை
2. ராகுல் திராவிட் - 10 முறை
3. ரிஷப் பந்த் - 7 முறை
4. தோனி, சேவாக், கவாஸ்கர் - 5 முறை.
உலக அளவில்...
சச்சின் டெண்டுல்கர் -10
ஸ்டீவ் வாக் -10
ராகுல் திராவிட் - 10
எம்.ஜே.ஸ்லாடர் - 9
ஏ ஐ களிச்சர்ரன் - 8
ஏபிடி வில்லியர்ஸ் - 8
இன்சமாம் - 8
ரிஷப் பந்த் -7
ஹைடன் - 7
அலைஸ்டர் குக் -7
ஆர்பி கன்ஹை -6
பிரைன் லாரா - 6
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.