மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்கா அணியும் நாளை (அக்.20) இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
2009இல் தொடங்கிய மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. பின்னர் இடையில் ஒருமுறை மே.இ.தீவுகள் அணி 2015-16இல் ஒருமுறை வென்றது. மற்ற 6 முறையும் ஆஸ்திரேலிய அணி வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இதுவரை கோப்பையை அடிக்காத நியூசிலாந்து அணியும் தெ.ஆப்பிரிக்க அணியும் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் யார் வென்றாலும் அவர்களுக்கு இது முதல் டி20 உலகக் கோப்பையாகும்.
நியூசிலாந்து மகளிரணியின் பலம்
நியூசி. மகளிரணி 2000ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால், அந்த அணியில் இருந்தவர்கள் யாரும் தற்போதைய அணியில் இல்லை.
நியூசிலாந்தின் கேப்டன் சோஃபியா டிவைன் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
உலகக் கோப்பைக்கு முன்பாக தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 35 வயதாகும் டிவைன் வெள்ளைப் பந்தில் 7,000க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். 37 வயதாகும் பேட்ஸ் 10,000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
34 வயதாகும் வேகப் பந்துவீச்சாளர் தஹுஹு 112 ஒருநாள் விக்கெட்டுகள் 93 டி20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் வைராக்கியம்
2023 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தெ.ஆ. அணி ஆஸ்திரேலியாவிடம் தங்களது சொந்த மண்ணிலேயே தோல்வியுற்றது.
ஆனால், அதே தெ.ஆ. அணிதான் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தியது. கடந்த 15 வருடமாக இறுதிப் போட்டிக்கு வந்த ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
நியூசிலாந்து: சோஃபியா டிவைன் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், இசபெல்லா கேஸ் (கீப்பர்), மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ஃபிரான் ஜோனாஸ், லீ காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர் , ஹன்னா ரோவ், லியா தஹுஹு.
தென்னாப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர் (கீப்பர்), அயன்டா ஹலூபி, சினாலோ ஜாஃப்டா (கீப்பர்), மரிசான் காப், அயபோங்கா காகா, சுனே லூஸ், நோன்குலுலேகோ மலாபா, செஷ்னி நாயுடு, துமி செகுகுனே, சோலி ட்ரையான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.