படம் | ஐசிசி
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு; உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.

நியூசிலாந்து - 158/5

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ப்ரூக் ஹால்லிடே 38 ரன்களும், சூஸி பேட்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் நன்குலுலேகோ மிலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அயபோங்கா காஹா, ச்லோ டிரையான் மற்றும் நாடைன் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT