படம் | AP
கிரிக்கெட்

தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பதிலடி கொடுக்கும் வலிமையான அணி

இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது எனவும், தோல்வியிலிருந்து மீண்டு பதிலடி கொடுக்கும் அளவுக்கு இந்திய அணி மிகவும் வலிமையானது எனவும் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: 36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய மண்ணில் கடைசியாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்ததாக நினைக்கிறேன். அதற்கு பிறகு தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனால், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது மிகவும் பெருமையான தருணம். நாங்கள் இதனை கொண்டாடுவோம்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக மிகவும் சவாலானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்திய அணியிடம் சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை உள்ளது என்றார்.

நியூசிலாந்து வீரர்களுக்கு பாராட்டு

நியூசிலாந்து வீரர்களை டாம் லாதம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்து வீரர்கள் குறித்து அவர் பேசியதாவது: நியூசிலாந்து அணி நேற்று மாலை புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். டிம் சௌதி, ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் மூவரும் மிகச் சிறப்பாக பந்துவீசினர். முதல் போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. புணேவில் நடைபெறவுள்ள இரண்டவாது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT