ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் - பேட்டர் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்
36 வயதாகும் மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 வருடமாக ஆஸி. அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
அடுத்து பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் டி20 தொடருக்கும் ஒருநாள் தொடருக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடுவார். பிக் பேஸ், டாஸ்மானிய அணிகளில் விளையாடுவார்.
ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது:
கடந்த டி20 உலகக் கோப்பையுடன் எனது சர்வதேச கிரிக்கெட் முடிந்துவிடுமென எனக்குத் தெரியும். ஓய்வு, பயிற்சியாளர் தொடர்பாக ஜியார்ஜ் பெய்லி, மெக்டொனால்டு உடன் கடந்த 6 மாதங்களாக உரையாடி வந்திருக்கிறேன்.
கடந்த சில வருடங்களாகவே பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. நல்வாய்ப்பாக்கா அதுவும் அமைந்துவிட்டது. அதற்காக ஆர்வமாக இருக்கிறேன்.
ஆஸ்திரேலியாவின் அணியினர், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.