கேன் வில்லியம்சன் 
கிரிக்கெட்

இந்தியா உடனான 3-வது டெஸ்ட்டிலும் வில்லியம்சன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனின் தொடையில் தசை கிழிந்த காயம் குணமாகததால் மும்பையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது இந்திய ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

கேன் வில்லியம்சன் இல்லாமலே முக்கியமான தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது:

கேன் வில்லியம்சன் தேறிவருகிறார். ஆனால், அடுத்த போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு இல்லை. இப்போதைக்கு கேன் வில்லியம்சன் நியூசிலாந்திலேயே தங்கியிருப்பதுதான் அவரது உடல்நலத்துக்கு நல்லது.

அடுத்த மாதம் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT